கடுங்குளிர் நிலவுவதால் பழனிக்கு படிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்கும் திட்டம்..!
திண்டுக்கல் பழனி முருகன் கோவிலுக்கு படிப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை சீசன் என்பதால், உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவுவதால், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு களைப்பு தெரியாமல் இருப்பதற்காக, சுக்குகாபி வழங்க முடிவு செய்யப்பட்டு, இடும்பர் சன்னதி அருகில் சுக்குகாபி வழங்கப்படுகிறது.
ஒருவருக்கு தலா 100 மில்லி லிட்டர் வீதம் வழங்கப்படும் சுக்குகாபியை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி பருகி செல்கின்றனர்.
Comments