சீனாவிடம் 400 அணு ஆயுதங்கள் உள்ளது - அமெரிக்க ராணுவம் வெளியிட்ட தகவல்

0 1777

சீனாவிடம் 400-க்கும் அதிகமான அணு ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்க ராணுவத் தலமையகமான பென்டகன் தகவல் தெரிவித்துள்ளது.

சீனா தனது ராணுவத்தை 2035 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நவீனமயமாக்க திட்டமிட்டுள்ளதாக பென்டகன் தனது ஆண்டு ஆய்வறிக்கையில் கூறியுள்ளதோடு, சீனாவின் அணு ஆயுத தயாரிப்பு வேகம் அதிகரித்தால் 2035 ஆம் ஆண்டுக்குள் சுமார் ஆயிரத்து 500 அணு ஆயுதங்களை வைத்திருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கை இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும் தைவானில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பிற நாடுகளின் கணினி தரவுகளை அழிப்பதை அடுத்தக் கட்ட போராக சீனா மேற்கொள்ளும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments