ரவுடிபேபி சூர்யா மீதான குண்டர் சட்ட வழக்கிற்கு எதிராக உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
ரவுடிபேபி சூர்யா மீதான குண்டர் சட்டத்திற்கு எதிரான வழக்கில் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
டிக்டாக் செய்து பிரபலமான ரவுடிபேபி சூர்யா என்ற சுப்புலட்சுமி, பெண்களுக்கு எதிராக தகாதமுறையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். காழ்ப்புணர்ச்சியோடு குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவுடிபேபி சூர்யா மனு அளித்திருந்தார்.
நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காரமன் அமர்வு முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காவல் துறையினர் போட்டுக் காட்டிய ரவுடிபேபி சூர்யா பேசிய வீடியோக்களை பார்த்த நீதிபதிகள், வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
Comments