புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி உயிரிழப்பு

0 1700

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லெட்சுமி நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தது.

32 வயதான பெண் யானை லெட்சுமி கடந்த 1997ம் ஆண்டு 6 வயதில் இக்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. காலில் கொலுசு அணிந்து கோவிலில் ஒய்யாரமாக வலம் வந்த லெட்சுமி யானை இன்று காலை உயிரிழந்த நிலையில், மாரடைப்பால் அது உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மணக்குள விநாயகர் கோவிலில் வைக்கப்பட்ட யானையின் உடலுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோரும் திரளான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

கோவில் யானை லெட்சுமியின் உடலை பார்த்து, பாகன் கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments