ஆந்திர வனப்பகுதியில் செம்மரக் கடத்தல்: தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது.. 25 செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

0 1821

ஆந்திர வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பதி அடுத்த கரக்கம்பாடி வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், அவ்வழியாக செம்மரங்களை சுமந்துசென்ற நபர்களை மடக்கி பிடிக்க முயன்றனர்.

ஆனால் போலீசாரைக் கண்டவுடன் வனப்பகுதியில் தப்பியோடி மறைந்தனர். விரட்டிச் சென்ற போலீசார், 4 பேரை கைது செய்து 25 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments