ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியை காருடன் கிரேனை வைத்து தூக்கிய போலீசார்..!

0 3018

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா கைது செய்யப்பட்டார்.

இன்று காலை சந்திரசேகர ராவ் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட தொண்டர்களுடன் ஷர்மிளா காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து போலீசார், அவர் காரில் இருந்தபோதே கிரேன் மூலம் காரைத் தூக்கிச்சென்றனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் ஷர்மிளாவை விசாரணைக்காக அழைத்துச் சென்று மாலையில் கைது செய்தனர். முன்னதாக, தனது மகளை காண தாயார் ஒய்.எஸ். விஜயலட்சுமி புறப்பட்டவிருந்த நிலையில், போலீசார் அவரை வீட்டு காவலில் சிறை வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments