உலகின் மிகப்பெரிய கிரேட் பேரியர் பவளப்பாறை ஆபத்தில் உள்ளது - ஐ.நா
ஆஸ்திரேலியாவிலுள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை பகுதியான கிரேட் பேரியரை ஆபத்தில் உள்ள உலக பாரம்பரிய தளமாக பட்டியலிட வேண்டும் என்று, யுனெஸ்கோவிற்கு ஐ.நா குழு பரிந்துரைத்துள்ளது.
இந்த பவளப்பாறை சிறந்த சுற்றுலாதளமாக உள்ளதால், ஆஸ்திரேலிய அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருமானம் ஈட்டித்தருகிறது.
இதனால், ஐ.நாவின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, பருவநிலை மாற்றம் உலகெங்கிலும் உள்ள அனைத்து பவளப்பாறைகளையும் அச்சுறுத்தி வருவதாகவும், பவளப்பாறைகளை பாதுகாக்க அரசு 800 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Comments