கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பின் உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலை வெடிக்கத் தொடங்கியது..!
ஹவாயில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மவுனா லோவா எரிமலை, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து, நெருப்புக் குழம்பை வெளியேற்றி வருகிறது.
சுமார் 4,169 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலை, கடைசியாக கடந்த 1984ம் ஆண்டு வெடித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் எரிமலை வெடிக்கத் தொடங்கிய நிலையில், நெருப்புக் குழம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வதற்கான அறிகுறிகள் இல்லாததால், மக்கள் வெளியேற அறிவுறுத்தப்படவில்லை.
எனினும், முன்னெச்சரிக்கையாக 2 தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஹவாயின் அவசரகால மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments