ஆதாரை இணைக்க பொதுமக்களிடம் பணம் வாங்கினால் நடவடிக்கை - மின்சார வாரியம் கடும் எச்சரிக்கை

0 1767

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க, நுகர்வோரிடம் பணம் வாங்கினால், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரவாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மண்டல பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆதார் இணைப்பு பணிக்கான கணினியில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டால், மாற்று கணினிகளை தயாராக வைத்திருக்க வேண்டுமெனவும், ஆதார் எண்ணை இணைப்பதன் அவசியம் குறித்து பிளக்ஸ் போர்டு மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு முகாம்களுக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments