இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக உறவு - பிரிட்டன் பிரதமர் விருப்பம்
வரும் 2050 ஆம் ஆண்டில் உலக வளர்ச்சியில் இந்தோ-பசிபிக் பிராந்தியங்களின் பங்களிப்பு 50 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் என்பதால், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக உறவு மேற்கொள்ள விரும்புவதாக, பிரிட்டன் பிரதமர் ரிஷிசுனக் கூறினார்.
அரசின் வெளியுறவுக் கொள்கையை விளக்கும் வகையில் லண்டனின் நிதி மையத்தில் நடைபெற்ற விருந்தில் பேசிய ரிஷிசுனக், சீனா மற்றும் இந்தோனேஷியாவுடனான உறவிலும் தனது அரசு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இங்கிலாந்தின் வெளியுறவுக் கொள்கை புதிய ஆண்டில் வெளியிடப்படும் என்றும், இது காமன்வெல்த் நாடுகளுடனான ஒத்துழைப்பை அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Comments