கோவை சம்பவம் பாணியில் பேஸ்புக்கில் பதிவு.. திருச்சியைச்சேர்ந்த 2 பேர் கைது..!
கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்த ஜமேசா முபின் போன்றே, பேஸ்புக்கில் பதிவிட்டிருந்த திருச்சியைச்சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இனாம்குளத்தூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியனான செளபர் அலி என்பவர், "என் மரணச் செய்தியை நீங்கள் அறிந்தால், என் மறுமை வாழ்க்கைக்காக நல்ல முறையில் பிரார்த்தனை செய்யுங்கள்" என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனையறிந்த போலீசார், செளபர் அலி வீட்டில் நடத்திய சோதனையில், மர்மமான பொருட்கள் எதுவும் கிடைக்காத நிலையில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பதிவிட்டதற்காக அவரை கைது செய்தனர்.
இதே பதிவை தனது பேஸ்புக் பக்கத்தில் வைத்திருந்த ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாஷா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments