ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 6 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றி..!

0 1842

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

துபாயில் பணியாற்றி வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 50 வயதான நபருக்கு கடந்த ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டது.

தொடர் நெஞ்சு வலி காரணமாக தமிழகம் வந்த அவர், கடந்த ஜூலை மாதம் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது இதயத்தில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்தததால், இதயமாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

4 மாதங்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் பெறப்பட்டு கடந்த 17ந் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments