சத்தியமங்கலம் அந்தியூர் சாலையில் மழைநீரால் தண்ணீர் வேகமாக செல்வதால் தரைப்பாலம் மூழ்கியதில் போக்குவரத்து போக்குவரத்து பாதிப்பு..!
கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி பகுதியில் கனமழை காரணமாக சத்தியமங்கலம் அந்தியூர் சாலையில் கணக்கம்பாளையம் என்ற இடத்தில் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் வேகமாக செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
குண்டேரிபள்ளம், கம்பனூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையால் வெளியேறும் உபரி நீர் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு புகுந்துள்ளது.
நடவு செய்யப்பட்டு சில நாட்களே ஆன நிலையில் மழை நீர் புகுந்து பயிர்களை மூழ்கடித்துள்ளது.
Comments