உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர்

0 1905

அரசு மருத்துவமனைகள் எளிய மக்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்கும் பெரிய துறை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சைதாப்பேட்டையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்றும், இன்றும் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் மருத்துவ பெட்டகங்களை வழங்கிய அமைச்சர்,

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் எடுக்கத் தேவையில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் சீனாவில் இருந்து வருவோருக்கு மட்டும் பரிசோதனை செய்வது குறித்து மத்திய அரசிடம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments