2,700 ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமெரிக்க ஃபர்னிச்சர் நிறுவனம்

0 1991

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான ட்விட்டர், மெட்டா, கூகுள் தொடர்ந்து, அமெரிக்காவில் பர்னிச்சர் நிறுவனமொன்று ஒரேஇரவில் 2 ஆயிரத்து 700 ஊழியர்களை கூண்டோடு பணிநீக்கம் செய்த சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்திள்ளது.

மிசிசிப்பியை சேர்ந்த யுனைடெட் பர்னிச்சர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்,1993-ல் இருந்து இயங்கி வருகிறது. இதனிடையே, நன்றி தெரிவிக்கும் நாள் துவங்குவதற்கு ஒரு சிலநாட்கள் இருக்கும் சூழலில், ஊழியர்களுக்கு நிறுவனத்திடம் இருந்து குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வந்துள்ளது.

அதில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஊழியர்கள் பணிநீக்கத்திற்கு, நிறுவனத்தின் கடன் சுமை அதிகரித்ததே காரணம் என கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments