''மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவை அமல்படுத்துவது அவசியமானது'' - மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்
நாட்டில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவை அமல்படுத்துவது அவசியமானது என்றும் அதனை மீறுவோருக்கு அரசு சலுகைகளையும் ஓட்டுரிமையையும் வழங்கக்கூடாது என்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா 'ஒரு குழந்தை' கொள்கையை அமல்படுத்தி, அதன் மூலம் வளர்ச்சியும் அடைந்ததாக கூறினார்.
சீனாவில் நிமிடத்திற்கு 10 குழந்தைகள் பிறக்கும் நிலையில், இந்தியாவில் 30 குழந்தைகள் பிறப்பதாகவும், இப்படி இருக்கும்பொழுது எவ்வாறு அந்நாட்டுடன் நாம் போட்டியிட முடியும்? என்றும் கிரிராஜ் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
1978ஆம் ஆண்டில் இந்தியாவை விட ஜி.டி.பி. குறைவாக இருந்த சீனா 'ஒரு குழந்தை' கொள்கையை அமல்படுத்தி மக்கள் தொகையில் சுமார் 60 கோடியை கட்டுப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
Comments