தேர்வில் விண்ணப்பித்தவர்களில் சுமார் 67 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்

0 1566

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வு நிறைவு பெற்றது.

3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கு 3 லட்சத்து 66 ஆயிரம் பேர் தேர்வு விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 67 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

சென்னை, கோவை, மதுரை, நெல்லை , புதுக்கோட்டை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் 295 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments