ஜமாத் இயக்கத்திற்கு சொந்தமான ரூ.90 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்தது மாநில புலனாய்வு அமைப்பு

0 1457

ஜம்மு காஷ்மீரில், தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தின், 90 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, மாநில புலனாய்வு அமைப்பு பறிமுதல் செய்தது. 

அந்த இயக்கத்தின் நிதி ஆதாரங்களை முடக்கும் வகையில், நேற்று அனந்த்நாக் மாவட்டத்தின் 11 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், ஜம்மு -காஷ்மீரில் ஜமாத்திற்கு சொந்தமான 200 இடங்களை கண்டறிந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments