''ஜி20 கூட்டமைப்பின் தலைமைப்பதவி இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு'' - பிரதமர் மோடி

0 1318

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப்பதவி இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றும், உலகத்தின் நன்மை, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உலகில் தற்போது நிலவும் பல்வேறு சவாலான விசயங்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளதாக கூறினார்.

அண்மையில் வெற்றிகரமாக ஏவப்பட்ட 'விக்ரம் எஸ்' ராக்கெட், தனியார் விண்வெளித் துறையில் புதிய சகாப்தத்தை முன்னெடுத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், இந்திய இசைக்கு உலகளவில் வரவேற்பு அதிகரித்து வருவதாகவும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு இசைக் கருவிகளின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments