வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திற்கும் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் - மத்திய அரசு
வேலைவாய்ப்பு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்திற்கும் பிறப்பு சான்றிதழை கட்டாயமாக்கும் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிறப்பு, இறப்பு சான்றிதழ் சட்டம்-1969 என்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதா வரும் 9 ஆம் தேதி துவங்கும் குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இந்த மசோதா நிறைவேறினால் 18 வயதாகும் நபரின் பெயர் தானாகவே வாக்காளர் பட்டியலில் சேர்வதோடு, ஒருவர் இறந்து விட்டால் அவரது பெயர் தானாகவே வாக்காளர் பட்டியலில் இருந்து நீங்கி விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments