கல்லூரி விடுதியிலிருந்து காணாமல் போன மாணவி.. கல்லூரி நிர்வாகம் உரிய பதிலளிக்கவில்லையென பெற்றோர் குற்றச்சாட்டு..!

0 2038

தஞ்சையில் கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவாரூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் தஞ்சையில் உள்ள அவர் லேடி நர்சிங்கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கல்லூரி விடுதியிலிருந்து அவர் காணாமல் போனதாக கடந்த 25ஆம் தேதி அவரது பெற்றோர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கல்லூரிக்கு வந்த அம்மாணவியின் பெற்றோர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் உரிய பதில் அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

மாணவியின் செல்போன், உடமைகள் கல்லூரி விடுதியிலேயே உள்ள நிலையில் மாணவி மட்டும் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments