அடுத்த ஆண்டில் செயற்கைக்கோள்களை பாதி செலவில் விண்ணில் செலுத்த ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனம் திட்டம்..!
அடுத்த ஆண்டில் செயற்கைக்கோள்களை பாதி செலவில் விண்ணில் செலுத்த ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் திட்டமிட்டுள்ளது.
நிதி திரட்டப்பட்ட 68 மில்லியன் டாலர்களை அடுத்த இரு திட்டங்களுக்கு பயன்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
போட்டி நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் ராக்கெட் ஏவும் செலவு 50 சதவீதம் குறைவாக இருக்கும் என்றும் ஸ்கைரூட் தெரிவித்துள்ளது.
ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் போன்ற பிராட்பேண்ட் சேவைகளை வழங்க வணிக நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்குகளை விரிவுபடுத்துவதால், வரவிருக்கும் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான சிறிய செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட வாய்ப்புள்ளது.
Comments