காஷ்மீரில் தீவிரவாதிகள் வைத்த இரண்டு வெடிகுண்டுகள்... செயலிழக்க வைத்த பாதுகாப்பு படையினர்

0 1539

ஜம்மு காஷ்மீரில் இரண்டு வெடிகுண்டுகளை கண்டெடுத்த பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியோடு அவற்றை செயலிழக்க வைத்தனர்.

இதனால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. குல்காம் மாவட்டம் ப்ரிசல் எனும் பகுதியில் தீவிரவாதிகள் இந்த வெடிகுண்டுகளை வைத்தாக பாதுகாப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

காவல்துறையும் ராணுவமும் இணைந்து இந்த இரு வெடிகுண்டுகளையும் செயலிழக்க வைத்தாக குல்காம் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்தனர். முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையிலும் இதுபோன்ற ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments