எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தாடை வளர்ச்சி குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தாடை வளர்ச்சி குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்ததால், பெற்றோரும் உறவினர்களும் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
MRI ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில், குழந்தை அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால், பெற்றோர் அனுமதியுடன் மயக்க மருந்து செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
குழந்தை மயக்க நிலையிலேயே இருந்ததால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட போது குழந்தை உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
குழந்தை உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என முறையிட்ட பெற்றோர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
Comments