குளித்த மாணவனை கடித்து இழுத்துச் சென்ற ஆட்கொல்லி முதலை..! கொள்ளிடம் ஆற்றில் சடலம் மீட்பு

0 2536

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளித்த மாணவரை ராட்சத முதலை ஒன்று கடித்து இழுத்துச்சென்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆற்றுக்குள் வலம் வரும் ஆட்கொல்லி முதலையிடம் இருந்து மாணவன் சடலமாக மீட்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வேளக்குடி பகுதியை சேர்ந்த ஐடிஐ மாணவர் திருமலை, பழைய கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது நீருக்குள் இருந்து குமிளிகள் விட்டபடி ராட்சத முதலை ஒன்று வந்துள்ளது. அதனை பார்த்து உடன் குளித்த இருவர் அலரியடித்து கரையேறிய நிலையில் 3 வதாக கரையேற முயற்சித்த மாணவர் திருமலையின் காலை பிடித்து இழுத்துச்சென்றதாக உடன் குளித்த நண்பர்கள் தெரிவித்தனர்

ராட்சத முதலையால் மாணவர் இழுத்துச்செல்லப்பட்ட தகவல் அறிந்து உறவினர்கள் கதறித்துடித்தபடி ஆற்றங்கரையில் கரையில் தவித்தனர்.

ஆற்றுக்குள் மாணவரை கடித்து இழுத்துச்சென்ற முதலையோ அவ்வபோது நீருக்கு மேல் வந்து போக்குகாட்டியது

சுமார் 12 அடியில் இருந்து 15 அடி நீளமும் 450 கிலோ எடையும் இருக்கும் என்று தீயணைப்புத்துறையினரால் கணிக்கப்பட்ட அந்த முதலை ஆற்றில் குறிப்பிட்ட புதர் பகுதியையொட்டி வலம் வந்து கொண்டிருந்தது

காவல்துறையினரின் தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நந்திமங்கலம் முதலை பிடி வீரர்கள் உதவியுடன், படகுடன் ஆற்றில் இறங்கி மாணவனை தேடினர்

பல மணி நேரமாக தேடிய நிலையில், முதலை வலம் வந்த முட்புதரில் மாணவனின் சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மாணவனின் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மாணவனின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்

மாணவனின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்

பழைய கொள்ளிடம் ஆற்றில் 10 அடி முதல் 20 அடி வரை உள்ள 500 ,600 கிலோ எடை உள்ள முதலைகள் அவ்வப்போது தென்படுவதாகவும், கடந்த ஐந்து வருடங்களில் 200 க்கும் மேற்பட்ட கால்நடைகள், மற்றும் பத்துக்கும் மேற்பட்ட மனிதர்கள் கடித்துக் குதறி இறந்து போய் உள்ளனர் என்றும் கொள்ளிடம் ஆற்றில் சுற்றித்திரியும் முதலைகளை பிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments