துணை ராணுவப் படை வீரர் ஏ.கே.47 துப்பாக்கியால் சுட்டதில் 2 சக வீரர்கள் உயிரிழப்பு
குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப் படை வீரர் ஒருவர் ஏ.கே.47 துப்பாக்கியால் தனது சகவீரர்கள் இருவரை சுட்டுக் கொன்றார்.மேலும் இருவர் காயம் அடைந்தனர்.
பணி நேரம் அல்லாத வேளையில் வீரர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து துப்பாக்கியால் சுட்ட வீரர் இனாச்சுவா சிங் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
எதற்காக பாதுகாப்பு படை காவலர்களுக்குள் சண்டை மூண்டது என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Comments