பொருநை இலக்கிய திருவிழாவை காணொளி வாயிலாக துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
தமிழின் இலக்கிய செழுமையை உலகறியச் செய்யும் வகையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இரு நாட்கள் நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், தமிழின் இலக்கிய செழுமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று அறிவுசார் சமூகத்தை வார்த்தெடுக்கும் நோக்கில் இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும் என்றும் முதலமைச்சர் கூறினார்
Comments