டிசம்பர் 5-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

0 1215

டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்தியா அதிகாரப்பூர்வமாக ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளதால், டிசம்பர் 5-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க 40 கட்சிகளின் தலைவர்களுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இதில் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார்.

இக்கூட்டத்தில் ஜி20 -க்கான திட்டம் குறித்து மத்திய அரசு தெரிவிக்க உள்ளது. அடுத்த ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாடு, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments