தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1756

தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை எனவும் 32 மாவட்டங்களில் உள்ள மருந்துக் கிடங்குகளிலும் மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆதம்பாக்கத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற பின், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments