நகைக்கடையில் தங்கம், வைர நகைகள் கொள்ளை - 3 சிறுவர்கள் கைது

0 1642

தாம்பரம் அருகே கெளரிவாக்கத்தில் உள்ள நகைக்கடையில் தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்த விவகாரத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

அதிகாலை 4 மணியளவில் கடை மேனேஜரின் செல்போனில் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கவே, போலீசாருடன் கடையில் சென்று பார்த்த போது டிஸ்பிளேவுக்காக வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

அதோடு, ஒரு மர்ம நபர் முகத்தை துணியால் மூடிக் கொண்டு நகைகளை திருடிய காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

நகைக்கடைக்கு எதிரே இருந்த டீக்கடைக்காரர் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளையில் ஈடுபட்ட 17 வயதான சிறுவனை கைது செய்த போலீசார், அவன் தங்கியிருந்த வீட்டின் மாடியில் தண்ணீர் தொட்டிக்கு அருகில் மறைத்து வைத்திருந்த நகைகளை மீட்டனர்.

மேலும், கொள்ளைக்கு திட்டம் தீட்டிக் கொடுத்ததாக அவனுடன் தங்கியிருந்த 2 சிறுவர்களையும் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments