அமைச்சர் கே.என் நேருவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் ஹேக்..!
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேருவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கே.என் நேருவின் ட்விட்டர் பக்கத்தில் திருச்சியில் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் 9 மணி நேரத்துக்கு முன் போஸ்ட் செய்யப்பட்டு இருந்தது.
அதன் பின் நாசா குறித்த தகவல்கள் பகிரப்பட்டு உள்ளது. இது தொடர்பாக திருச்சி சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் ட்விட்டர் பக்கத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments