மங்களூருவில் இளம் பெண்ணுடன் பேருந்தில் ஒன்றாக சென்றதால், அடி-உதை.. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் தாக்குதல் என புகார்..!
கர்நாடக மாநிலம் மங்களூருவில் பெண்ணுடன் பேருந்தில் பயணம் செய்தததாக இளைஞர் மீது மர்மநபர்கள் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
நந்தூர் அருகே இருவரும் ஒன்றாக பயணம் செய்தபோது அங்கிருந்த மர்மநபர்கள் சிலர் அந்த இளைஞரை சுற்றி வளைத்து தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கொடூர அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார், விசாரித்து வருகின்றனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் பஜ்ரங்தளத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் நிலையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
Comments