ஜனநாயகத்தில் எந்த அமைப்பும் முற்றிலும் சரியானது அல்ல - தலைமை நீதிபதி சந்திரசூட்

0 1479

ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் முற்றிலும் சரியானது அல்ல என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்ற வளாகத்தில் அரசியல் சாசன நாளை முன்னிட்டு உரை நிகழ்த்திய தலைமை நீதிபதி,
கொலீஜியம் உள்பட அரசியலமைப்பில் உள்ள எந்த ஒரு அமைப்பும் முற்றிலும் சரியானது எனக் கூற முடியாது என்றும், அதே நேரத்தில் இதே அமைப்புக்குள் இருந்து, அரசமைப்பைக் காப்பதற்காக பாடுபடுவோருடன் சேர்ந்து இயங்கி வருவதாக சந்திரசூட் மேலும் தெரிவித்தார்.

கொலிஜீயம் அமைப்பை மாற்றி அமைப்பதன் மூலமாகவோ நீதீபதிகளின் சம்பளத்தை உயர்த்துவதன் மூலமோ தரமான நபர்கள் நீதித்துறைக்குள் வருவதற்கு காரணமாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments