ரஷ்ய அதிபர் புதினின் உடல்நலம் மோசமடைந்து வருகிறதா?

0 1465

ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக, சில சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

புதினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், சமீபத்தில் கியூபாவின் அரசியல் தலைவர் மிகுவல் டியாஸ்-கேனல்-ஐ, அதிபர் புதின் சந்தித்து பேசினார்.

அப்போது நாற்காலியின் கைப்பிடியை பிடித்தவாறே புதின் பேசியதையும், கால்களை நகர்த்திக்கொண்டே இருந்ததையும், தி மிரர் நாளிதழ் சுட்டிக்காட்டி, அவரது உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பியது.

இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையின்போது, புதின் அசெளகரியமாக உணர்ந்ததையும், வீடியோ பதிவில் காணமுடிந்தது.

இதனை சுட்டிக்காட்டிய சர்வதேச ஊடகங்கள், புதினின் உடல்நிலை கேன்சர் உள்பட பல்வேறு நோய்களால் மோசமடைந்து வருவதாக தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments