கனமழையால் வெள்ளக்காடான சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரம்..! வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள்
அதிகனமழையால், சவுதி அரேபியாவிலுள்ள ஜெட்டா நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வியாழக்கிழமை ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன.
மழையின் காரணமாக நேற்று ஜெட்டாவில் விமானப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளிகளும் தற்காலிகமாக மூடப்பட்டன. மழை பாதிப்புகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு கருதி மெக்கா யாத்திரை செல்லும் முக்கிய சாலை மூடப்பட்டு, பின்னர் மழை நின்றதும் திறக்கப்பட்டது.
Please pray for #jeddah pic.twitter.com/ujtndTekmg
Comments