தனியார் பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. பள்ளி தாளாளரிடம் போலீசார் விசாரணை

0 1489

கள்ளக்குறிச்சியில் நர்சரி பிரைமரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பள்ளி தாளாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி நகராட்சி, பசுங்காயமங்கலம் சாலை பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், சுமார் 100 மாணாக்கர்கள் படித்து வரும் நிலையில், இப்பள்ளியின் உரிமையாளரும், தாளாளருமான ராஜமாணிக்கம் 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், இது தொடர்பாக, தொலைபேசி வாயிலாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் ராஜமாணிக்கத்தை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments