நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து தங்க காசுகளை திருடிச்சென்ற தாய் மற்றும் மகன் கைது

0 1484

புதுச்சேரியில் நகைக்கடை ஒன்றில் நகை வாங்குவது போல் நடித்து, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க காசுகளை திருடிச்சென்ற தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

சாரம் பகுதியை சேர்ந்த ராஜா, நகர பகுதியான செட்டி தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

கடந்த 21-ம் தேதி இவரின் கடைக்கு வந்த ஒரு பெண் மற்றும் இளைஞர் நகை வாங்குவது தொடர்பாக ஊழியரிடம் பேசி விட்டு சென்றுள்ளனர்.

அவர்கள் மீண்டும் அடுத்த நாள் வந்து, நகை வாங்குவது போல் ஊழியரிடம் பேசி விட்டு, நகை வாங்காமல் சென்றுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த ராஜா, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவர்கள் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி, தங்க காசுகளை திருடிச்சென்றது தெரியவந்தது.

ராஜா அளித்த புகாரின்பேரில், சிசிடிவி காட்சிகளை தமிழக போலீசாருக்கு அனுப்பி விசாரித்ததில், அவர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த செல்வி மற்றும் அவரின் மகன் பாலகுமரன் என்பது தெரியவந்தது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments