சிறைகளில் கட்டப்பட்ட அடையாள அணிவகுப்பு கட்டடங்கள் காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர்

0 1193

12 மாவட்ட சிறைகளில் 2 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அடையாள அணிவகுப்பு பிரத்யேக அறைகளுக்கான கட்டடங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

குற்றம் இழைத்து சிறையில் இருக்கும் சிறைவாசிகள் மீதான குற்றத்தை, சாட்சிகள் வாயிலாக நிரூபிக்க, குற்றவாளிகள் சாட்சிகளை அடையாளம் காணாத வகையில், ஒருவழி கண்ணாடி தடுப்புடன் கூடிய தனி அறைகள் மத்திய சிறைகளில் செயல்பட்டு வருகின்றன.

இத்திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டின் மாவட்டச்சிறைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments