உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதால் கிழக்கு ஐரோப்பாவில் ஆயுதத்தொழில் வளர்ச்சி
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதால், கிழக்கு ஐரோப்பாவில் ஆயுதத்தொழில் வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதில் இருந்து துப்பாக்கிகள், பீரங்கி குண்டுகள் மற்றும் பிற ராணுவப் தளவாடங்களை, உக்ரைனுக்கு, அதன் நேச நாடுகள் வழங்கி வருகின்றன.
அக்டோபர் 3-ம் தேதி வரை ஆயுதங்கள் வழங்குவதில் அமெரிக்காவைத் தொடர்ந்து, பிரிட்டன் இரண்டாவது இடத்திலும், போலந்து மூன்றாவது இடத்திலும், செக் குடியரசு ஒன்பதாவது இடத்திலும் உள்ளதாக, கீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு உதவுவதை பிராந்திய பாதுகாப்பாக, அதன் நேச நாடுகள் கருதுகின்றன.
Comments