சென்னையில் ஜவுளி நகரம் அமைக்க நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1574

சென்னையில் ஜவுளி நகரம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், மாமல்லபுரத்தில் 30 கோடி ரூபாய் செலவில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளிகள் கருத்தரங்கை, முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதில் உரையாற்றிய அவர், விருதுநகர் குமாரலிங்கபுரத்தில் 1,500 ஏக்கர் பரப்பில் ஜவுளிப்பூங்கா அமைக்க சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

கரூர், திருப்பூர், காஞ்சிபுரத்தில் ஏற்றுமதி மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாகவும் முதலமைச்சர் அப்போது தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments