திருமணத்துக்கு சீர்வரிசை தூக்கிச்சென்ற பெண் சுருண்டு விழுந்து பலி..! கொரோனாவுக்கு பிந்தய அதிர்ச்சி
திருமண நிகழ்ச்சியில் இசைக்கு ஏற்ப ஆடியவாறு சீர்வரிசை தட்டு தூக்கி வந்த 23 வயது இளம் பெண் மயங்கிச்சரிந்து பலியான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
கொரோனா பாதித்து மீண்டவர் திடீரென உயிரிழந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஹவாஞ்சே பகுதியைச் சேர்ந்த ஜோஸ்னா லூயிஸ் 23 வயதாகும் இவர் தனது உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இசைக்கு ஏற்ப ஆடியவாறு முதல் வரிசையில் சீர்வரிசை வரிசை தட்டு எடுத்து வந்த ஜோஸ்னா லூயிஸ் சட்டென்று மயங்கிச்சரிந்தார்.
சீர்வரிசை துக்கி வந்த பெண் சட்டென்று சுருண்டு விழுந்ததால் அங்கு கூடி யிருந்தவர்கள் பதறினர்
கீழே சுருண்டு விழுந்த ஜோஸ்னா லூயிஸை உடனடியாக மீட்டு உறவினர்கள் அனைவரும் சேர்ந்து பக்கத்தில் உள்ள மணிபால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்.
அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்று நினைவு திரும்பாமலேயே ஜோஸ்னா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் இது குறித்து பிரம்மாவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜோஸ்னா லூயிசுக்கு எந்தவிதமான நோயும் இல்லை என்றும், ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜோஸ்னாஅதில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும், அதன் பிறகு அவருக்கு எந்த ஒரு உடல் நலக்கோளாரும் இல்லாத நிலையில் இந்த மரணம் நிகழ்ந்திருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
Comments