பெரு நாட்டில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் சரக்கு வாகன ஓட்டுனர்கள் போராட்டம்..!
பெரு நாட்டில் எரிபொருள் விலை உயர்வு, உரத்தட்டுப்பாடு உள்ளிட்டவற்றிற்கு எதிராக, விவசாயிகள் மற்றும் சரக்கு வாகன ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், நாட்டின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய துறைமுகமான கலாவிற்கு லாரிகள் வருவதில் தாமதம் ஏற்படுவதால், சோளம், கோதுமை போன்ற இறக்குமதிப் பொருட்களின் விநியோகமும் தடைபட்டுள்ளது.
Comments