திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செயற்கைக்கோளின் மாதிரி வரைப்படத்துடன் சுவாமி தரிசனம் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள்..!

0 1990

இந்தியா, பூட்டான் நாடுகளின் செயற்கைக்கோள்களை, இஸ்ரோ நாளை விண்ணில் செலுத்துவதை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஞ்ஞானிகள் குழுவினர் செயற்கைக்கோளின் மாதிரி வரைப்படத்துடன் வழிபாடு நடத்தினர்.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி சி54 ராக்கெட் மூலம், 9 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுனை தொடங்கியுள்ளது.

புவி மற்றும் கடல் சார் ஆராய்ச்சி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்கள் நாளை ஏவப்படவுள்ளன.

இதனை முன்னிட்டு, திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்த விஞ்ஞானிகள் குழுவினருக்கு, தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதம், வேத ஆசி வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments