சொத்துப் பிரச்சனையால் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை வீட்டின் பால்கனியில் ஏறி பத்திரமாக மீட்ட பெண் காவல் ஆய்வாளர்..!
சென்னையில், சொத்துப் பிரச்சனையில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் பால்கனியில் ஏறி மீட்டுள்ளார்.
மந்தைவெளியில் உள்ள தனக்கு சொந்தமான சொத்துகளை மூதாட்டி கௌசல்யா, தனது 4 பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுத்துள்ளார்.
இதற்கிடையில், மூதாட்டியின் இளைய மகனான கோபிநாத், அவரது அக்கா பரமேஸ்வரி பெயரில் உள்ள சொத்துகளை எழுதி வாங்க திட்டம் தீட்டி, மூதாட்டிக்கு உணவு வழங்காமல், வீட்டை விட்டு வெளியே அனுப்பி கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது.
தனது மகன் இழைத்த கொடுமை தாங்காமல், வீட்டின் பால்கனியில் இருந்து மூதாட்டி குதிக்க முயன்றுள்ளார். தகவலறிந்து வந்த பட்டினப்பாக்கம் பெண் காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து மூதாட்டியை கீழே இறக்கினார்.
Comments