'ஆருத்ரா' உள்ளிட்ட 3 நிதி நிறுவனங்கள் ரூ.9,000 கோடி மோசடி.. முக்கிய குற்றவாளிகள் 10 பேர் 'தேடப்படும் குற்றவாளிகள்' ஆக அறிவிப்பு..!
'ஆருத்ரா' உள்ளிட்ட 3 நிதி நிறுவனங்களினால் 9,000 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் 10 பேரை 'தேடப்படும் குற்றவாளிகள்' ஆக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.
முதலீடு செய்யும் பணத்தில் 10 முதல் 25 சதவீதம் வரை வட்டி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி, பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று, மோசடி செய்த ஆருத்ரா, ஐ.எஃப்.எஸ் மற்றும் ஹிஜாவு ஆகிய நிதி நிறுவனங்களின் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, மூன்று நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க தனித்தனியாக மின்னஞ்சல் முகவரிகளும் வழங்கப்பட்டுள்ளன.
தலைமறைவான முக்கிய குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட்டு, தகவல் அளிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Comments