விழுப்புரம் அருகே பாமக நிர்வாகி கழுத்தறுத்து கொலை.. குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு..!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பாமக நிர்வாகியை படுகொலை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
கப்பியாம்புலியூரைச் சேர்ந்த ஆதித்யன் என்பவர் பாமக மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.
நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், நீண்டநேரம் கழித்து அதே பகுதியில் சாலையோரம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
தகவலறிந்த விக்கிரவாண்டி போலீசார் ஆதித்யன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் ஆதித்யனுக்கும், அவரது உறவினருக்கும் இடையே மண் எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.
Comments