பவானி ஆற்றில் திடீரென வந்த வெள்ளத்தில் சிக்கி தவித்த 7 பேர்.. கயிறு கட்டி பரிசல் மூலம் பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்..!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 7 இளைஞர்களை தீயணைப்புத் துறையினர் பரிசல் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.
பீளமேட்டைச் சேர்ந்த 7பேர் ஒன்றாக இணைந்து நேற்று மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
ஆற்றின் நடுப்பகுதியில் குளித்த போது திடீரென பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனை சற்றும் எதிர்பாராத 7பேரும் ஆற்றின் மையப்பகுதியில் இருந்த மரத்தின் மீது ஏறி உயிர்தப்பினர்.
Comments