கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து பல கோடி மோசடியில் ஈடுபட்ட வி சாப்ட் லிங்க் நிறுவனர் கைது..!
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக வி சாப்ட் லிங்க் நிறுவனர் சந்திரசேகரை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
ஹோல்ஸ்டேன்ட் சிக்ஸ் என்ற கிரிப்டோ கரன்சியில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோறும் 10 ஆயிரம் வரையில் சம்பாதிக்கலாம் என்ற அறிவிப்பினை சென்னை வடபழனியைச் சேர்ந்த சந்திரசேகர் வெளியிட்டார்.
இதனை நம்பி சுமார் 3 ஆயிரத்து 500 பேர் லட்சக்கணக்கில் பணம் செலுத்திய நிலையில் சந்திரசேகர் மோசடி செய்து வருவதாக அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் சென்னை சைபர் க்ரைமில் புகார் அளித்தார்.
விசாரணையில், பல கோடி மோசடி செய்யப்பட்டது தெரிய வந்ததைத் தொடர்ந்து சந்திரசேகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments