ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம்..!

0 2170

ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான தமிழக அரசின் மசோதா மீது விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த அக்டோபர் 19ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதாவின் காலம் வரும் 27ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார்.

ஏற்கனவே, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments