மின்சாரம் தாக்கி 5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு.. உடலை புதைக்கும் குழியில் இறங்கி அகோரி போல நிர்வாணமாக பூஜை செய்த கணவன்!

0 2123

திருப்பத்தூர் அருகே, மின்சாரம் தாக்கி பலியான 5 மாத கர்ப்பிணி பெண்ணின் உடலை புதைக்கும் குழியில் இறங்கிய கணவன், நிர்வாணமாக பூஜை செய்தார்.

4 ஆண்டுகளுக்கு முன் திருமணமான ராஜா தேசிங்கு - பூர்ணிமா தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. மீண்டும் கருவுற்றிருந்த பூர்ணிமா, நேற்று முன்தினம் மின் மோட்டாரில் பொருத்தப்பட்டிருந்த வாட்டர் வாஷ் பைப்பை பயன்படுத்தி மாட்டு கொட்டகையை சுத்தம் செய்த போது எதிர்பாராத விதமாக, தண்ணீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், மயானத்தில் பூர்ணிமாவின் உடலை அடக்கம் செய்ய தோண்டப்பட்ட குழியில் இறங்கிய தேசிங்கு ராஜா, உடல் முழுக்க உப்பைக் கொட்டி நிர்வாணமாக படுத்து பூஜை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சாமியார் போல மாறியதாகவும் மனைவியை பிரிந்ததற்காக பூஜை செய்யும் பொருட்டு அவர் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments